குற்றம்
மூதாட்டியை ஏமாற்றி வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5.65 லட்சம் திருட்டு : பெண் கைது
மூதாட்டியை ஏமாற்றி வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5.65 லட்சம் திருட்டு : பெண் கைது
விழுப்புரத்தில் மூதாட்டியை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வடமலை என்ற மூதாட்டி விழுப்புரத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-இல் தனது கணக்கின் இருப்புத் தொகை குறித்து பார்ப்பதற்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் மூதாட்டிக்கு உதவி செய்துள்ளார். அதன்பிறகு மூதாட்டி வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் சிறுக சிறுக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரில், காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது மூதாட்டியிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பெண், அவரிடம் திரும்ப வேறு கார்டை கொடுத்தது தெரியவந்தது. இந்நிலையில் மூதாட்டியை ஏமாற்றிய சீதாலட்சுமி என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.