பெண் கைது
பெண் கைதுpt desk

ஈரோடு: மூதாட்டியின் வீட்டில் 11 பவுன் தங்க நகைகள் திருட்டு - பக்கத்து வீட்டுப் பெண் கைது

ஈரோட்டில் மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் பக்கத்து வீட்டுப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 11.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.எஸ் நகரில் மூதாட்டி பேச்சியம்மாள் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 12 ம் தேதி வெளியூர் சென்றிருந்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 11.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 26 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

arrest
arrestfreepik

அதன்பேரில், காவல்துறையினர் முதாட்டியின் வீட்டின் அருகே வசித்து வருபவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி பேச்சியம்மாள் வீட்டை பூட்டி விட்டு சாவியை வைக்கும் இடத்தை கண்டறிந்த பக்கத்து வீட்டுக்காரரான சாமுண்டீஸ்வரி சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த 11.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

பெண் கைது
புதுச்சேரி | சுற்றிப்பார்க்க சென்ற 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 4 பேர் கைது!

இதனையடுத்து சாமுண்டீஸ்வரியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com