\
சென்னை குழந்தைக் கடத்தல் கும்பலிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

சென்னை குழந்தைக் கடத்தல் கும்பலிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

சென்னை குழந்தைக் கடத்தல் கும்பலிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு
Published on

சென்னையில் பெண் குழந்தையை கடத்திய போலி வழக்கறிஞரிடம் இருந்து மேலும் ஒரு ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

சென்னையில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட மணிமேகலை உள்ளிட்ட 3 பேரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மணிமேகலையிடம் இருந்த மற்றொரு ஒன்றரை வயது ஆண் குழந்தை, பிறந்த ஓரிரு நாட்களிலேயே ரயிலில் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் குறித்தும், கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மணிமேகலை என்ற மற்றொரு பெண், தனது பச்சிளம் குழந்தையை 30 ஆயிரம் ரூபாய்க்கு போலி வழக்கறிஞரிடம் விற்க முயற்சித்துள்ளதும் தெரியவந்துள்ளது. 30 ஆயிரம் ரூபாயும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி அந்த பச்சிளம் குழந்தையை போலி வழக்கறிஞர் கடத்திச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com