பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை அடித்துக்கொன்ற மருமகள்!

பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை அடித்துக்கொன்ற மருமகள்!
பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை அடித்துக்கொன்ற மருமகள்!

பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை, கணவர் உதவியுடன் மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டைச் சேர்ந்தவர் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 26. இவரது கணவர் மற்றும் மாமனாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கணவர் விவசாய வேலை செய்து வந்தார். சனிக்கிழமை கணவர் வயல் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்தார் உஷா. அப்போது திடீரென்று மாமனாருக்கு காமம் தலைக்கேறியது. மருமகளைப் பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். மருமகளால் தப்பிக்க முடியவில்லை. வன்கொடுமை செய்துவிட்டு, ‘என்னை மன்னித்துவிடு. தவறாக நடந்துகொண்டேன். இதுபற்றி யாரிடம் சொல்ல வேண்டாம்’ என்று கெஞ்சினார் மாமனார். இதையடுத்து உஷா, அவரை மன்னித்து யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை இரவும் மருமகளை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது கணவர் வந்துவிட்டார். இதைக் கண்டு திடுக்கிட்டார். கண்ணீர்விட்ட உஷா, மாமனாரின் கொடுமை பற்றி கணவரிடம் அழுதுகொண்டே சொன்னார். பிறகு அங்கிருந்த கட்டையால் அவரைத் தாக்கினார். இதைக் கணவரும் தூண்டியதால் உஷா மாமனாரை அடித்தே கொன்றார். 

பின்னர் கணவனும் மனைவியும் போலீசில் சரணடைந்தனர். எனது தந்தையை கொன்றது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று உஷாவின் கணவர் தெரிவித்தார். போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com