\
அடியாட்களுடன் வந்து சர்பத் பாட்டிலால் கணவரின் மண்டையை உடைத்த மனைவி!

அடியாட்களுடன் வந்து சர்பத் பாட்டிலால் கணவரின் மண்டையை உடைத்த மனைவி!

அடியாட்களுடன் வந்து சர்பத் பாட்டிலால் கணவரின் மண்டையை உடைத்த மனைவி!
Published on: 

கன்னியாகுமரி அருகே குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழும் கணவரின் கடைக்கு அடியாட்களுடன் சென்று சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு அருகே பழக்கடை நடத்தி வருபவர் அன்பு. இவரது மனைவி மோனிகா. குடும்பத்தகராறு காரணமாக இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே மனைவி மோனிகா அடிக்கடி கணவர் அன்புவின் கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை மீண்டும் மோனிகா அடியாட்களுடன் கணவரின் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், மோனிகா அங்கிருந்த சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்புவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோனிகாவையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com