சமைத்த உணவை சாப்பிடாமல் பானிபூரி வாங்கி வந்த கணவன் - விரக்தியில் மனைவி தற்கொலை
மகாராஷ்டிராவில் தான் சமைத்த உணவை சாப்பிடாமல் கணவர் பானிபூரி வாங்கி வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் அம்பேகோன் பகுதியைச் சேர்ந்த ப்ரதிக்ஷா சரவடேவுக்கும்(23), காஹினிநாத் சரவடேவுக்கும்(33) கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்தே இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ப்ரதிக்ஷா இரவு உணவு சமைத்திருக்கிறார். ஆனால் ப்ரதிக்ஷாவின் கணவர் வீட்டுக்கு வரும்போதே அவரிடம் சொல்லாமல் பானிபூரி வாங்கி வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில் மனமுடைந்த ப்ரதிக்ஷா அடுத்தநாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருடைய குடும்பத்தார் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ப்ரதிக்ஷா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக ப்ரதிக்ஷாவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

