’எனக்கு ஏன் திருமண ஏற்பாடு செய்யவில்லை?’ - தாயை அடித்து கொலைசெய்த கொடூர மகன்

’எனக்கு ஏன் திருமண ஏற்பாடு செய்யவில்லை?’ - தாயை அடித்து கொலைசெய்த கொடூர மகன்

’எனக்கு ஏன் திருமண ஏற்பாடு செய்யவில்லை?’ - தாயை அடித்து கொலைசெய்த கொடூர மகன்
Published on

எனக்கு ஏன் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை என பெற்ற தாயையே மகன் கொலை செய்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில், போலீசாருக்கு உயிரிழப்பு குறித்து தகவல் அளிக்கப்பட்டது. 67 வயதான அந்தப் பெண்மணி எப்படி உயிரிழந்தார் என போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. ஓய்வுபெற்ற ஆசிரியையை அவரது மகனே கொலைசெய்தது தெரியவந்தவுடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

கோபால் நகரில் தனது தாய், அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோருடன் வசித்து வந்தார் 32 வயதான அப்துல் அஹத் பரான். வேலைக்கு செல்லாத நிலையில், அடிக்கடி அப்துல் அவரது தாயை செலவுக்கு பணம்கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளார். தனது மொபைலை பார்ப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வந்த அப்துல், தனக்கு பெண்பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி தனது தாய் அஸ்மா ஃபரூக் மற்றும் குடும்பத்தினரை எச்சரித்துள்ளார்.

அப்துலை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், தனது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில், தாய் அஸ்மா ஃபரூக்கை கடுமையாக தாக்கியுள்ளார் அப்துல். அண்ணன் அத்தாஉல்லா மற்றும் அண்ணி இருவரும் வீடு திரும்பியபோது, அஸ்மா ஃபரூக் கடுமையாக காய்மடைந்திருப்பதை கண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அப்போது அப்துல் தனது தாயார் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அஸ்மா ஃபரூக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவித்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் உடற்கூறு பரிசோதனையில் அஸ்மா ஃபரூக் கடும் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்த நிலையில், போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அப்போது அப்துல் குறித்த தகவல்கள் தெரிய வர, அவரை விசாரித்து கைது செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் அப்துல் தனது தாயை, கிரிக்கெட் மட்டை மற்றும் உலோகக் கம்பி ஆகியவற்றால் அடித்தே கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியை தனது ஓய்வூதியத்திலிருந்து அடிக்கடி அப்துலுக்கு செலவுக்கு பணம் கொடுத்து வந்தார் என்றும், வேலைக்கு போகாத மகன் அடிக்கடி தனது தாயிடம் வன்முறையில் ஈடுபட்டதையும் அவரது அண்ணனே போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com