\
சென்னை: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு.. போலீஸ் விசாரணை

சென்னை: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு.. போலீஸ் விசாரணை

சென்னை: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு.. போலீஸ் விசாரணை
Published on

பெரும்பாக்கத்தில் 7 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் உள்ள எட்டடுக்கு குடியிருப்பின் 113வது பிளாக்கிற்கு வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இரவுநேரம் என்பதால் தீவைத்தது யார் என்று தெரியவில்லை.


இதில் குடியிருப்பிற்கு வெளியே நிறுத்திருந்த 7 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் நிரோஷா, சுந்தர், சேகர், மகேந்திரன், பிரபு, திருநங்கை அபிநயா ஆகியோருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து பள்ளிகரணை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com