\
மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது!

மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது!

மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் கைது!
Published on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மருத்துவ‌மனை நடத்தி வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மானாமதுரை பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு தவறான சிகிச்சை அளித்து வருவதாகவும் மாவட்ட
சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயனுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்துபடி மருத்துவ
அதிகாரிகளுக்கு விஜயன் உத்ரவிட்டார். இதனைத்தொடர்ந்து மானாமதுரையின் சுற்று வட்டாரப்பகுதியில் ஆய்வு நடத்திய மருத்துவ அதிகாரி
மகேஸ்வரன், மானாமதுரை பயணியர் விடுதி முன் மருத்துவமனை மற்றும் மருந்துக்கடை நடத்தி வந்த போலி மருத்துவர் தேவமனோகரன்
என்பவரை கண்டுபிடித்துள்ளார்.அந்த போலி மருத்துவர் பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. காவல்
துறையினர் போலி மருத்துவர் தேவமனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com