குற்றம்
அமைச்சரை ஆபாசமாக சித்தரித்த வாட்ஸ் அப் அட்மின் கைது!
அமைச்சரை ஆபாசமாக சித்தரித்த வாட்ஸ் அப் அட்மின் கைது!
அமைச்சர் ஜெயக்குமாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப்-ல் பரப்பியதால் குரூப் அட்மின் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் படத்தை ஆபாசமாக சித்தரித்தார். பின் 198 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துள்ளார். அதைக் கண்டறிந்த போலீசார் படத்தை பகிர்ந்த குணசேகரனையும், குரூப் அட்மினாக இருக்கும் சகோதரர்கள் இருவர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.