\
திருமண ஆசைகாட்டி 12ம் வகுப்பு முடித்த மாணவியை கடத்தியதாக கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

திருமண ஆசைகாட்டி 12ம் வகுப்பு முடித்த மாணவியை கடத்தியதாக கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

திருமண ஆசைகாட்டி 12ம் வகுப்பு முடித்த மாணவியை கடத்தியதாக கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
Published on

குடியாத்தம் அருகே 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவியை கடத்தியதாக கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது, 12-ம் வகுப்பு படித்துள்ளார். இந்த மாணவியை கடந்த 23ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது தந்தை மேல்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீசார் மேல்பட்டி அருகே கொத்தமாரிகுப்பம் பகுதியில் மாணவியை மீட்டனர்.

மேலும் அவருடன் இருந்த இளைஞரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் கௌதம் (21) என்பதும், அவர் குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கௌதமை கைதுசெய்த மேல்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com