எங்களை கொன்றுவிடுவார் என்ற பயத்தில் நாங்கள் முந்திக் கொண்டோம் - குற்றவாளிகளின் வாக்குமூலம்

எங்களை கொன்றுவிடுவார் என்ற பயத்தில் நாங்கள் முந்திக் கொண்டோம் - குற்றவாளிகளின் வாக்குமூலம்

எங்களை கொன்றுவிடுவார் என்ற பயத்தில் நாங்கள் முந்திக் கொண்டோம் - குற்றவாளிகளின் வாக்குமூலம்
Published on

பல்லாவரம் அருகே  இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை 7 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், மாபுபி தெரு அருகே காலி மைதானத்தில் நாகு (எ) ஞானசம்பந்தன் (46), என்பவர் தனது நண்பர்களோடு மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஞானசம்பந்தன் என்பவருக்கும் ராஜேஷ்குமார் (34), என்பவருக்கும் விநாயகர் சிலை வைத்த இடத்தில் பாடல் போடுவது தொடர்பாக சிறிய வாய்த் தகராறு நடந்துள்ளது இதனைத் தொடர்ந்து ஞானசம்பந்தன் 6 நபர்களோடு ஒன்றாக இருப்பதை அறிந்து எங்கே நம்மை கொன்று விடுவாரோ என எண்ணிய ராஜேஷ் குமார் 6 பேரோடு சென்று இருவரை வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில் நாகு (எ) ஞானசம்பந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சரவணன் (56), என்பவருக்கு தலை, தாடை, மற்றும் கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்து தப்பியோடிய ராஜ் (எ) ராஜேஷ் குமார் (34), வெற்றிச் செல்வன் (26), ஜெயகுமார் (25), முகமது அன்வர் (24), முகமது இலியாஸ் (23), வசந்தகுமார் (20), யுகராஜ் (26), ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் எங்களை கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் நாங்கள் முந்திக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 2 கத்திகள், உருட்டுக்கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com