நாங்கள் சிஐடி போலீஸ் பணத்தை கொடு: வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

நாங்கள் சிஐடி போலீஸ் பணத்தை கொடு: வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
நாங்கள் சிஐடி போலீஸ் பணத்தை கொடு: வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுக்கரை அருகே சி.ஐ.டி போலீஸ் எனக்கூறி லாரி ஓட்டுனரிடம் வழிப்பறி செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மதுக்கரை - நீலாம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் மதுரவாயலைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவர் தனது மினி லாரியை நிறுத்தி உணவருத்திவிட்டு வெளியே வந்து அவர் லாரியில் ஏற முயன்றுள்ளார். அப்போது அங்கு மது பாட்டில்களுடன் நின்றிருந்த 4- பேர் தங்களை சிஐடி போலீஸ் எனவும், வாகனத்தில் திருட்டு லோடு இருப்பதாகச் சந்தேகப்படுவதாகக் கூறி ஆவணங்களைக் காட்ட கூறியுள்ளனர்.

இதனால்; சந்தேகமடைந்த நாகராஜன் ஆவணங்களை காட்ட மறுத்ததால் நால்வரும் அவரை தாக்கியதோடு அவரிடம் இருந்த ரூ. 1,500 பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தப்பிய நாகராஜன் உணவகத்திற்குள் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து பணியிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரோந்து காவல்துறையினர் வருவதை கண்ட 4- பேரும் இரண்டு இருசக்கர வாகனங்களில் தப்பினர். ரோந்து போலீசார் லாரி ஓட்டுநர் நாகராஜனை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்றனர். அப்போது பாலத்துறை பிரிவு அருகே நின்றிருந்த நால்வரையும் போலீசார் பிடிக்க முயன்றபோது, ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

இந்நிலையில், சிக்கிய 3 பேரை அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ஆத்துப்பாலம் 6-வது வீதியைச் சேர்ந்த முகமது அலி (43), போத்தனூரைச் சேர்ந்த பாஷா (40), போத்தனூர் சின்னம்மாள் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (36) என்பதும், தப்பியவர் கரும்புக்கடையைச் சேர்ந்த அஸார் (30) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பிடிபட்ட மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com