விருதுநகர்: சொத்துத் தகராறில் தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த சோக முடிவு

விருதுநகர்: சொத்துத் தகராறில் தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த சோக முடிவு

விருதுநகர்: சொத்துத் தகராறில் தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த சோக முடிவு
Published on

விருதுநகர் அருகே சொத்துத் தகராறில் அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே பாவாலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இலக்கன் (32). விசாயியான இவரும், இவரது சகோதரர் அழகு முனீஸ்வரன் (26) என்பவரும் நேற்றிரவு வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குடிபோதையில் இருந்த இலக்கன், அழகு முனீஸ்வரனின் சுண்டு விரலை கடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அழகு முனீஸ்வரன் அருகில் இருந்த மண்வெட்டியைக் கொண்டு இலக்கனை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இலக்கனை பக்கத்து வீட்டினர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் பாவாலி காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த அழகு முனீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com