விருதுநகர்: அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருடியதாக முன்னாள் காவலர் கைது

விருதுநகர்: அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருடியதாக முன்னாள் காவலர் கைது
விருதுநகர்: அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருடியதாக முன்னாள் காவலர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அடுத்தடுத்துள்ள மூன்று வீடுகளில் திருடிய முன்னாள் காவலரை சாத்தூர் நகர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் முருகன் கோயில் தெருவில் உள்ள வக்கீல் சந்து பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (35). இவரது மனைவி சங்கீதா (30). லோடு வண்டி டிரைவராக பணிபுரியும் பாண்டியன், லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்றுள்ளார். இவரது மனைவி சங்கீதா தீப்பெட்டி ஆபீஸிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வேலை முடித்து வீடு திரும்பிய சங்கீதா வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4,500 ரூபாய் பணம் ஒன்றரை கிராம் தாலியும் திருடு போனது தெரியவந்தது. இந்நிலையில் சங்கீதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயலட்சுமி (29) என்பவரது வீட்டின் கதவை உடைத்து அலமாரியில் இருந்த ரூ.400 பணம் திருடு போனது தெரியவந்தது.

இவர்கள் உடனே சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கான்வென்ட் தெற்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (37) என்பவர் வீட்டிலும் பீரோவை உடைத்து ரூ. 3,500 திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து இந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த ஒருவரை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணை நடத்தினர்.

அவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த கற்குவேல் (29) என்பதும், இவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்ததும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கடந்த 2019ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் என்பதும் தெரியவந்தது.

சாத்தூர் நகர் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் நகை மற்றும் பணம் திருடியதும் இவர்தான் என்பது விசாரணையில் உறுதி செய்யட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கற்குவேல் மீது வழக்குப் பதிவு செய்து நகர் காவல்நிலைய போலீஸார் தொடர்ந்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com