எண்ணெய் கடையில் திருட்டு போன ரூ1,75,000.. சிசிடிவி கேமராவில் பதிவான பகீர் காட்சிகள்!

எண்ணெய் கடையில் திருட்டு போன ரூ1,75,000.. சிசிடிவி கேமராவில் பதிவான பகீர் காட்சிகள்!
எண்ணெய் கடையில் திருட்டு போன ரூ1,75,000.. சிசிடிவி கேமராவில் பதிவான பகீர் காட்சிகள்!

எண்ணெய் கடையின் மேற்கூரையை பிரித்து கடைக்குள் புகுந்த மர்ம நபர், துணியை போர்த்தி கொண்டு பணம் திருடிச்சென்ற சம்பவம் விருதுநகர் அருப்புகோட்டை அருகே நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையிலுள்ள ஜோதி முருகன் ஆயில் ஸ்டோர் என்ற எண்ணெய் கடையில், மர்ம நபர் ஒருவர் துணியை போர்த்திக்கொண்டு மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடைக்குள் இருந்த ரூ.1,75,000 பணத்தை திருடி சென்றுள்ளார்.

அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் ஜோதிமுருகன் ஆயில் ஸ்டோர் என்ற எண்ணை கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் கடைக்கு வந்த உரிமையாளர் ஜோதிமுருகன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு உள்ளே இருந்த கல்லாபெட்டி சிதறி அதிலிருந்த ரூ.1,75,000 பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவம் குறித்து நகல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் கடையில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில், சிசிடிவி கேமரா காட்சிகளில் மேற்கூரையை பிரித்து கடைக்குள் இறங்கிய மர்ம நபர் வெறும் துணியை மட்டும் போர்த்திக்கொண்டு உடம்பில் ஆடை இல்லாமல் கடைக்குள் சுற்றி வருவதும் மற்றும் சிசிடிவி கேமராவை கண்டதும் தலையைக் கவிழ்த்து முகத்தை மூடுவதும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து கேமராவின் மேல் துணியை போர்த்திவிட்டு அந்த நபர் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com