\
நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ
Published on: 

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பேருந்து நிலையம் அருகே மோதலில் ஈடுபட்டு சண்டையிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பழனி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பழனி பேருந்து நிலையம் அருகில் சைக்கிளில் வந்த மாணவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நடந்த வந்த மாணவரும், நின்று கொண்டிருந்த மாணவரும் திடீரென ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நேற்று மாணவர் ஒருவர் ஆசிரியரை மிரட்டிய வீடியோ வைரலான நிலையில் பழனி பகுதியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுகொடுக்காமல் ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கவேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com