சமயன் கொலைவழக்கில் கைதானவர் சைக்கோ அல்ல

சமயன் கொலைவழக்கில் கைதானவர் சைக்கோ அல்ல

சமயன் கொலைவழக்கில் கைதானவர் சைக்கோ அல்ல
Published on

விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் சிறுவன் கொலை வழக்கில் கைதான தில்லைநாதன் சைக்கோ அல்ல என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஆராயி குடும்பத்தின் மீது நள்ளிரவில் கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் ஆராயின் மகன் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கடுமையாக தாக்குதலுக்குள்ளான ஆராயி மற்றும் அவரது 14வயது மகள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருந்தனர். ஆராயி மற்றும் அவரது மகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர். தலையில் கூர்மையில்லாத கனமான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் சுயநினைவை இழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் பணம் நகைகள் எதுவும் திருடுபோனதாக தெரியவில்லை.இதன்காரணமாக குற்றவாளி ஒரு சைக்கோ கொலைக்காரனாக இருக்கலாம் எனக் காவல்துறையால் சந்தேகிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் இதுதொடர்பாக புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தில்லைநாதன் மீது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள காவல்நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்ததுள்ளது.கைதான தில்லைநாதனிடம் இருந்து 6சவரன் நகைகள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான தில்லைநாதன் சைக்கோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com