"கூலிக்கு பதில் கலப்பட மதுவை குடிக்க கொடுத்தார்கள்” - உயிரிழந்தவரின் உறவினர் பகீர் தகவல்

விறகு வெட்டும் வேலைக்கு சென்று கூலியாக கலப்பட மது பாட்டிலை வாங்கி வந்தவர். அதை குடும்பத்துடன் குடித்ததால், அனைவரும் பலியான சோகம்.
ஆறுமுகம் இறந்தவரின் மகன்
ஆறுமுகம் இறந்தவரின் மகன்PT

விறகு வெட்டும் வேலைக்கு சென்று கூலியாக கலப்பட மது பாட்டிலை வாங்கி வந்தவர். அதை குடும்பத்துடன் குடித்ததால், அனைவரும் பலியான சோகம்.

செங்கல்பட்டில் கலப்பட மது பானத்தை குடிந்த ஐந்து பேர் உயிரிழந்த சோகத்தில் திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார், உயிரிழந்தவர்களின் ஒருவரான வசந்தா என்பவரின் மகன் ஆறுமுகம், இது குறித்து அவர் நம்மிடம் பேசியதாவது, “அம்மாவாசன்னு ஒருத்தரு, அவங்க வீட்ல இருக்கும் மரங்களை வெட்ட என் மாமாவை (அக்காவின் கணவர்) வேலைக்கு கூப்பிட்டு இருந்தாரு. என் மாமாவும் அவங்க வீட்டுக்கு போய் அந்த மரத்த வெட்டினதும், அவர்கிட்ட கூலி கேட்டுருக்காரு. ஆனா அம்மாவாச, எங்க மாமாகிட்ட, என்கிட்ட பணமில்ல... சரக்கு தான் இருக்கு, இத்த கூலியா வச்சுக்கன்னு, மாமாகிட்ட பாட்டில தந்து இருக்காரு. எங்க மாமாவும் அத்த வீட்ல கொண்டுவந்தும், என் மாமா, அக்கா அஞ்சலை அம்மா வசந்தா மூணுபேரும் அத்த குடிச்சாங்க... குடிச்ச கொஞ்சநேரத்துல ஒருத்தர் ஒருத்தரா மயங்கி விழுந்து இறந்துட்டாங்க... இவங்க இறந்ததற்கு அம்மாவாச தந்த கலப்பட மது தான் காரணம்” என்று கூறியிருப்பது சர்சையை ஏற்படுத்தி இருகிறது.

இது குறித்த வீடியோ...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com