\
விழுப்புரம் : ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி

விழுப்புரம் : ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி

விழுப்புரம் : ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி
Published on

விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியில் ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. காலை வங்கி அலுவலர்கள் வங்கிக்கு வந்தபோது வங்கியின் உள்ளே இருந்த இரண்டு ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது.

அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் விரைந்து வந்து அங்கு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியிலிருந்து பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கியில் இரவு காவலர் இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் உடனடியாக இரவு காவலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com