திருப்பூர்: நொய்யல் ஆற்றில் கலக்கும் மனித கழிவுகள் - வெளியான அதிர்ச்சி வீடியோ
தனியார் வாகனங்கள் முறைகேடாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் மனித கழிவுகளை கலந்து விடுவது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் செப்டிக் டேங்க் வாகனங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் மனிதக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் நொய்யல் ஆற்றில் கலந்து விடுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இன்று திருப்பூர் மங்கலம் சாலை ஆரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றுக்கு செல்லும் கால்வாயில் தனியார் வாகனம் ஒன்று மனிதக் கழிவுகளை வெளியேற்றி வந்தனர். இதுதொடர்பாக அந்த வழியாக சென்ற நபர் அவர்களிடம் கேட்டபோது கழிவுகளை வெளியேற்றி வந்த நபர் உடனடியாக அதனை நிறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதுபோன்று மனிதக் கழிவுகளை ஆற்றில் கலப்பவர்கள் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.