மான் தோல் பறிமுதல்pt desk
குற்றம்
வேலூர் | வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான் தோல் பறிமுதல் - ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான் தோல் பறிமுதல், ஒரு லட்சம் அபராதம் விதிப்பு - வேலூர் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாநகர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குணசேகரன் (69) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் வாங்கிய மான் தோலை வீட்டில் பதுக்கி வைத்து, சாமியார் அல்லது மாந்திரீகம் செய்யும் நபர்களுக்கு சுமார் 70 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதையறிந்த வேலூர் சரக வனத்துறையினர் வியாபாரிகள் போல் மான் தோலை விலைக்கு வாங்குவதாக குணசேகரிடம் பேசி பிடித்துள்ளனர். பின்னர் பதப்படுத்தப்பட்ட ஒரு மான் தோலை பறிமுதல் செய்து, குணசேகரனுக்கு ஒரு லட்சம் அபராதமாக விதித்து அதை வசூலித்தனர்.
மேலும் இது குறித்து வேலூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.