Arrestedpt desk
குற்றம்
வேலூர் | தங்கும் விடுதியில் அதிரடி சோதனை - சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
வேலூரில் தங்கும் விடுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற நாகராஜன், தலைமையிலான காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 13-பேர் கொண்ட கும்பல் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜி (50), ஜெய்சங்கர் (54), ரவி (50), சுரேஷ் (42), தினேஷ்குமார் உள்ளிட்ட 13-பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 13 பேரை வேலூர் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.