\
13 நாட்டு வெடிகுண்டுகளுடன் வேட்டையாட சுற்றித்திரிந்தவர்கள் கைது

13 நாட்டு வெடிகுண்டுகளுடன் வேட்டையாட சுற்றித்திரிந்தவர்கள் கைது

13 நாட்டு வெடிகுண்டுகளுடன் வேட்டையாட சுற்றித்திரிந்தவர்கள் கைது
Published on: 

13 நாட்டு வெடிகுண்டுகளுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வனத்துறைக்கு உட்பட்ட எருக்கம்பட்டு காப்புக்காட்டில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக பேர்ணாம்பட்டு வனத்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில், எருக்கம்பட்டு பீட் காப்புகாடு சுவார்பல்லி சரகத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது வனத்துறையில் சுற்றித்திரிந்த 2 வரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வன விலங்குகளை வேட்டையாட இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து விலங்குகளை வேட்டையாட பயன்படுத்த வைத்திருந்த இறைச்சியின் கொழுப்பு மற்றும் மாம்பழம் தடவிய 13 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சக்தி, வேலு ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com