லஞ்சம் கேட்டதால் வீடியோ வெளியிட்டு தற்கொலை - வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்

லஞ்சம் கேட்டதால் வீடியோ வெளியிட்டு தற்கொலை - வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்
லஞ்சம் கேட்டதால் வீடியோ வெளியிட்டு தற்கொலை - வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்
பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுவிட்டு, திருவண்ணாமலையில் பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் காலி மனைக்கு பட்டா வழங்க நடுக்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபு லஞ்ச விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுவிட்டு அப்பகுதியில் உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
குற்றச்சாட்டுக்கு ஆளான கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனிடம் காவல்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், அவரை பணியடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com