பெண் கைது
பெண் கைதுpt desk

வாணியம்பாடி | அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி - அங்கன்வாடி அமைப்பாளர் உட்பட இரு பெண்கள் கைது

வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் செல்போன் மூலம் பேசி பணம் வசூலித்த அங்கன்வாடி பெண் அமைப்பாளர் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்காக, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இதற்காக உதவியாளர் (சமையலர்) மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர் (ஆசிரியை) பணிக்காக மாவட்ட முழுவதிலிருந்து பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்

இதை அறிந்த திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ராமவதி (அங்கன்வாடியில் அமைப்பாளராக உள்ளார்) மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரைச் சேர்ந்த ஜம்ஷிகா ஆகியோர் ஆலங்காயம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பித்தியுள்ள பெண்களின் முகவரிகளை அதிகாரிகள் உதவியுடன் பெற்று, செல்போன் மூலம் பேசி வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்

பெண் கைது
மதுரை | பணப் பிரச்சையில் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர்... சிறுவன் உட்பட இருவர் காயம்

இந்நிலையில், ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஷாஹித் என்பவரிடம் ராமவதி, மற்றும் ஜம்ஷிகா செல்போனில் பேசி 50 ஆயிரம் ரூபாய் முன் பணம் கேட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரை உறவினர்கள் உடன் சேர்ந்து அப்துல் ஷாஹித் இருவரையும் பிடித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீது வழக்குப் பதிவு செய்து வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com