வாணியம்பாடி: ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக இருவர் கைது

வாணியம்பாடி: ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக இருவர் கைது

வாணியம்பாடி: ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக இருவர் கைது
Published on

வாணியம்பாடி அருகே ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களை தாக்கியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் காவல் நிலையத்தில் மதுக்குமார் மற்றும் வினோத்குமார் ஆகிய இரு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு புத்துக்கோவில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டு அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையூராக இருந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் மது போதையில் இருந்த நான்கு இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது வசந்த் மற்றும் பூவரசன் ஆகிய இரு இளைஞர்கள் காவலர்களின் சட்டை பிடித்து தாக்கியுள்ளனர்.

இதையடுத்து உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய மேலும் இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com