தோல் தொழிற்சாலையில் டன் கணக்கில் திருட்டு... தானாகவே காவல்துறையிடம் சிக்கிய நபர்கள்!

தோல் தொழிற்சாலையில் டன் கணக்கில் திருட்டு... தானாகவே காவல்துறையிடம் சிக்கிய நபர்கள்!
தோல் தொழிற்சாலையில் டன் கணக்கில் திருட்டு... தானாகவே காவல்துறையிடம் சிக்கிய நபர்கள்!

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையின் சுமார் 2 டன் உதிரி பாகங்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் மதுசூதனன் என்பவர், மது இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற பெயரில் தோல் தொழிற்சாலை இயந்திரங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். அங்கு அவர் வைத்திருந்த தோல் தொழிற்சாலையின் சுமார் 2 டன் உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்களை (இரும்பு பொருட்கள்) கடந்த 16.11.2022 அன்று 3 பேர் திருடிக் கொண்டு சரக்கு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதை அறிந்த மதுசூதனன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் 3 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் திருடு போனதாக புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சரக்கு வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது கடந்த 16 ஆம் தேதி கச்சேரி சாலையில் உள்ள இன்ஜினியரிங் ஒர்க்ஸில் திருடிச் சென்ற ஆகாஷ், பூபாலன், விக்ரம் ஆகிய 3 இளைஞர்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com