வாணியம்பாடி: சிறுமியை கட்டாயத் திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

வாணியம்பாடி: சிறுமியை கட்டாயத் திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

வாணியம்பாடி: சிறுமியை கட்டாயத் திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது
Published on

வாணியம்பாடியில் பள்ளிக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள பொன்னேரி குரும்பர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). லாரி ஓட்டுனரான இவர், வாணியம்பாடியை அடுத்த கணவாய்புதூர் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 21ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com