”என்னை ஆணாக மாற்றுங்கள்”-தோழியுடன் வாழ மந்திரவாதியை நம்பிச் சென்ற பெண் கொலை! விசாரணையில் பகீர் தகவல்

ஆணாக மாற்றுவதாகக் கூறி பெண் ஒருவரை மந்திரவாதி கொலை செய்திருப்பது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலைfile image

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது நிரம்பிய இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி.

ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி சாகர் இருவருக்கும் இடையே நிலவி வந்த உறவு வீட்டில் தெரிய வந்துள்ளது. இதனால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தச் சூழலில் பூனத்தை அழைத்து ’நீ ஆணாக மாறினால் பிரீத்தியை திருமணம் செய்துகொள்ளலாம்’ என அவரிடம் பிரீத்தியின் தாயார் ஆலோசனை கூறியதாகத் தெரிகிறது.

இதைக் கேட்டு பூனம் குமாரி, லக்கிம்பூர்கேரியில் வசிக்கும் ராம்நிவாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்து உள்ளார். அவர், தன்னை ஆணாக மாற்றும்படி மந்திரவாதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேநேரத்தில், பூனத்தைக் கொலை செய்தால் பணம் தருகிறேன் என அந்த மந்திரவாதியிடம் பிரீத்தியின் தாயார் கூறியதாகத் தெரிகிறது.

ஓரினச் சேர்க்கையாளர்
ஓரினச் சேர்க்கையாளர்file image

இந்த நிலையில், ஆணாக மாற விரும்பிய பூனத்தைச் சடங்குகள் செய்வதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை மந்திரவாதி கொலை செய்து உடலை முட்புதருக்குள் மறைத்து வைத்துள்ளார். இதற்கிடையே பூனத்தைக் காணவில்லை என அவருடைய சகோதரர் பர்விந்தர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பூனம் பேசிய செல்போன் மூலம் விவரங்களைச் சேகரித்துள்ளனர்.

அதன்மூலம் மந்திரவாதியைப் பிடித்து விசாரித்து உள்ளனர். அவரும், கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், பூனத்தின் சடலைத்தையும் காட்டியுள்ளார். அந்த நேரத்தில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய மந்திரவாதியையும் கொலை குற்றத்துக்கும் ஆளானவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com