உசிலம்பட்டி: கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது
உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் 4500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல் நிலையத்திகு உட்பட்ட அல்லிகுண்டம் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார், உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது 65 வயது மதிக்கத்தக்க அய்யக்காள் என்ற மூதாட்டி வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.
அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் 4500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், மூதாட்டி அய்யக்காளை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.