சொத்துக்காக பெற்ற தாயையே மனைவியுடன் சேர்ந்து கொளுத்திய மகன்: உ.பியில் அதிர்ச்சி!

சொத்துக்காக பெற்ற தாயையே மனைவியுடன் சேர்ந்து கொளுத்திய மகன்: உ.பியில் அதிர்ச்சி!
சொத்துக்காக பெற்ற தாயையே மனைவியுடன் சேர்ந்து கொளுத்திய மகன்: உ.பியில் அதிர்ச்சி!

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக வயதான பெண், தனது மகன் மற்றும் மருமகளால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜலால்பூர் நகரில் நடந்த இந்த கொடுமையான சம்பவத்தில், 58 வயதான ரத்னா குப்தா என்ற அந்த பெண் தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த பெண் தனது வாக்குமூலத்தில் தனது மகன், மருமகள் மற்றும் மற்றொரு உறவினர் தன்மீது தீ வைத்ததாக கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் மகன் வீட்டை விற்க வற்புறுத்தியதாகவும், ஆனால் அவர் தனது எல்லா குழந்தைகளுக்கும் வீட்டை பிரித்துக்கொடுக்க விரும்பினார். அனால் ஆகாஷ் என்ற அந்த நபர் தனது தாயை வீட்டை விற்கசொல்லி தொடர்ந்து கட்டாயப்படுத்தினார், இந்த பிரச்னை காரணமாக தன் தாயின் மீது  ஆகாஷ் மற்றும் அவரது மனைவி தீவைத்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com