\
உ.பி: பாலுறவுக்கு மறுத்த மனைவியை கொலைசெய்ததோடு குழந்தைகளை கால்வாயில் வீசிய நபர் கைது

உ.பி: பாலுறவுக்கு மறுத்த மனைவியை கொலைசெய்ததோடு குழந்தைகளை கால்வாயில் வீசிய நபர் கைது

உ.பி: பாலுறவுக்கு மறுத்த மனைவியை கொலைசெய்ததோடு குழந்தைகளை கால்வாயில் வீசிய நபர் கைது
Published on: 

உத்தரபிரதேசத்தில் பாலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்றுவிட்டு 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பாசேதி கிராமத்தைச் சேர்ந்தவர் பப்புகுமார். குமாருடைய மனைவி டோலி (36) கடந்த 15 நாட்களாக அவருடன் பாலுறவு வைத்துக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தனது மூன்று குழந்தைகளான சோனியா(5), வான்ஷ்(3) மற்றும் ஹர்ஷிதா(15 மாதம்) ஆகியோரை வீட்டிற்கு அருகிலிருந்த கால்வாயில் உயிருடன் எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து விவரமறிந்த கிராமத்தினர் புர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் டோலியின் உடலை கைப்பற்றியதுடன், குமாரை முசாஃபர்நகரில் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது மனைவியை கொலை செய்துவிட்டு குழந்தைகளை உயிருடன் கால்வாயில் வீசியதை ஒத்துக்கொண்டுள்ளார். கால்வாயில் வீசப்பட்ட குழந்தைகளின் உடல்கள் இதுவரை கிடைக்காததால் போலீஸார் தேடும்பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com