குற்றம்
உ.பி.: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. இரு சிறுவர்கள் கைது..
உ.பி.: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. இரு சிறுவர்கள் கைது..
ஹத்ராஸில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நிகழ்வு குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் ஹத்ராஸில் மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹத்ராஸில் நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்புகார் குறித்து கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு கிராமத்தில் இருந்து சிறுமியின் தந்தையால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஹத்ராஸ் சந்திப்பு காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
"குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சிறுவர்கள், ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களை காவலில் எடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.