உ.பி : உறவு பற்றி வதந்தி பரப்பியதாக நண்பரை சுட்டுவிட்டு, தோழியை சுட்டுக்கொன்ற இளைஞன்

உ.பி : உறவு பற்றி வதந்தி பரப்பியதாக நண்பரை சுட்டுவிட்டு, தோழியை சுட்டுக்கொன்ற இளைஞன்

உ.பி : உறவு பற்றி வதந்தி பரப்பியதாக நண்பரை சுட்டுவிட்டு, தோழியை சுட்டுக்கொன்ற இளைஞன்
Published on

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், உறவு சிக்கல்கள் காரணமாக ஒரு இளைஞன் தனது நண்பனை வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டதோடு, தனது பெண்தோழியை அவளின் வீட்டிலேயே சுட்டுக் கொன்றார்.  

இறந்த பெண் 22 வயது கிர்த்திகா திரிவேதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவர் 22 வயது ஹுக்மேந்திர சிங் குர்ஜார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  குற்றம்சாட்டப்பட்ட நபரான 24 வயதான மந்தன் சிங் செங்கர் உறவு புரிதலில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இந்த கொடூரமான குற்றத்தை செய்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் 2016 முதல் நெருங்கிய நண்பர்களாக இருந்து உளவியலில் எம்.. படித்துள்ளனர். கிர்த்திகாவுடனான தனது உறவு குறித்து ஹுக்மேந்திரா வதந்திகளை பரப்புவதாக மந்தன் சந்தேகித்ததைத் தொடர்ந்து மூவருக்கும் இடையில் சண்டை இருந்துவந்தது. இதனால் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஹுக்மேந்திராவை தலையின் பின்புறத்தில் சுட்ட மந்தன், பின்னர் கரும்பலகையில் "மந்தன் முடித்துவிட்டான்" என்று எழுதினார்.

மந்தன் பின்னர் கிருத்திகாவை அவளது வீட்டில் வைத்து பல முறை சுட்டார். இதனைப்பார்த்த கிர்த்திகாவின் குடும்பத்தினரும் அயலவர்களும் மந்தனை பிடித்து ஒரு கம்பத்தில் கட்டி, போலீஸுக்கு தெரிவித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கிர்த்திகா மருத்துவமனையில் உயிரிழந்தார், மருத்துவ சிகிச்சைக்காக ஹுக்மேந்திரா டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலைமை ஆபத்தானதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மந்தன் மத்திய பிரதேசத்தின் நெவாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிர்த்திகா மற்றும் ஹுக்மேந்திரா உள்ளூரை சேர்ந்தவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com