நீரில் மூழ்கி இறந்த இளம்பெண் - கொலைசெய்யபட்டதாக கூறிய உ.பி போலீஸ்
கிழக்கு உத்தரபிரதேசத்தின் படோஜி மாவட்டத்தில் திங்களன்று இளம்பெண் ஒருவர் தனது கிராமத்தில் எருமைகளை மேய்க்கச் சென்றபோது காணாமல் போய்விட்டார். அந்த பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகள் எருமை மேய்க்கச் சென்றதாகவும், திரும்ப வரவில்லை என்றும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சந்தேகத்தின்பேரில் சில பெயர்களையும் குறிப்பிட்டனர். அவர்களை விசாரித்த போலீஸாரால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
படோஹியின் எல்லையில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் புதன்கிழமை பிற்பகல் நீரில் மூழ்கி இறந்த ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது உடலில் தீக்காயங்களும் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். படோஹியின் காவல்துறைத் தலைவர் ராம் பதான் சிங், அந்த பெண் கொலை செய்யப்பட்டதாக தோன்றுவதாகவும், உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் கூறினார்.
பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் மீண்டும் பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்மீது ஆசிட் தாக்குதலும் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.