\
உளுந்தூர்பேட்டை:  மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் கைது

உளுந்தூர்பேட்டை: மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் கைது

உளுந்தூர்பேட்டை: மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் கைது
Published on

உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துநர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். பணியில் சேர்வதற்காக வேப்பூரில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக அரசு பேருந்தில் மதுபோதையில் சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அருண்குமார், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதனால் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையம் அருகில் பேருந்தை நிறுத்தி அருண்குமாரை கீழே இறங்கி உள்ளனர். அங்கும் பெண் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசி அருண்குமார் ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com