உடுமலை: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்... 9 பேர் போக்சோவில் கைது

உடுமலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 9 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Pocso case
Pocso casept desk

செய்தியாளர்: கார்வேந்த பிரபு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

Udumalaipet
Udumalaipetpt desk

இதையடுத்து சிறுமியை விசாரித்தபோது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதை அடுத்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணி குமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும், 14, 15. மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Pocso case
மதுரவாயல்: வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்த தாய் - ஆத்திரத்தில் வெட்டிக் கொலை செய்த மகன்

உடுமலை பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உரிய விசாரணை செய்யுமாறு உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு திரண்டனர் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Police station
Police stationpt desk
Pocso case
விழுப்புரம்: புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் - பெண்ணின் சடலத்துடன் போராட்டம்

அப்போது உரிய விசாரணைக்கு பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் போலீசார் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com