வடகொரிய அதிபர் சகோதரரின் கொலை வழக்கு: இரு பெண்கள் கைது
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்கள் வரும் 28ம் தேதி, முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த பிப்ரவரி 13ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது விஷம் கலந்த ரசாயனப் பவுடர் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ள மலேசிய காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர்களை வரும் 28ம் தேதி மலேசிய உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோரதரரை, வடகொரியா புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் கூறி வருகின்றன.