லாரி மீது கார் மோதல்: டிவி நடிகர்கள் பலி

லாரி மீது கார் மோதல்: டிவி நடிகர்கள் பலி
லாரி மீது கார் மோதல்: டிவி நடிகர்கள் பலி

கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரு டி.வி. நடிகர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

மும்பை கோரேகாவ், தீரஜ் ரெசிடன்சி பகுதியை சேர்ந்தவர் ககன்தீப் (38). இவர் இந்தி டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நண்பர் அர்ஜித் (30). இவரும் டிவி நடிகர். இவர்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின், உதவியாளருடன் மும்பை திரும்பினர். காரை நடிகர் ககன்தீப் ஓட்டி வந்தார். நேற்று மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் மனோர் அருகே கார் வந்துகொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தறிகெட்டு ஓடியது. பின்னர் கன்டெய்னர் லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. அதில் இருந்த 3 பேரும்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

விபத்து நடந்த காரில் மதுபாட்டில்கள் கிடந்ததால், குடிபோதையில் நடிகர் காரை ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com