Accusedpt desk
குற்றம்
"ஏன் எங்க வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்றீங்க?" - போலீசாரை வெட்ட முயன்றதாக இரு ரவுடிகள் கைது!
பொன்னேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை அரிவாளால் வெட்ட முற்பட்டதாக 2 ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தனிப்படை உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருவர், 'ஏன் எங்களது வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறீர்கள்?' என வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்ட முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுதாரித்த காவல் துறையினர் அதிலிருந்து தப்பி அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Arrestedpt desk
பொன்னேரியை சேர்ந்த பிரபல ரவுடிகளான மகேஷ் (40), ஜெயசாரதி (20) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.