கேமரா இல்லை;ஆனால் நினைவாற்றல் உண்டு -பைக் எண்ணை வைத்து வழிப்பறி செய்தவர்களை மடக்கிய போலீஸ்

கேமரா இல்லை;ஆனால் நினைவாற்றல் உண்டு -பைக் எண்ணை வைத்து வழிப்பறி செய்தவர்களை மடக்கிய போலீஸ்

கேமரா இல்லை;ஆனால் நினைவாற்றல் உண்டு -பைக் எண்ணை வைத்து வழிப்பறி செய்தவர்களை மடக்கிய போலீஸ்
Published on

சென்னையில் சைக்கிளில் சென்ற பெண்ணின் கைப்பையை திருடிச் சென்ற சிறார் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, பாலவாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சனிக்கிழமையன்று பிரபாவதி என்ற பெண் பணிமுடிந்து சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சைக்கிளின் முன்பக்க கூடையில் இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். வழிப்பறி திருடர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை கவனித்த அப்பெண், காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணையை தொடங்கினர். ஊரடங்கினால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் சிசிடிவியை ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் பிரபாவதியிடம் திருடர்களின் அடையாளங்களை கேட்டுக்கொண்ட போலீசார், வாகன பதிவெண்ணை மூலம் அதன் உரிமையாளரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை இரண்டு பேர் வாங்கிச் சென்றது தெரியவந்தது.

அதனடிப்படையில் கொட்டிவாக்கத்தில் வீட்டில் இருந்த ரஞ்சய் (19) மற்றும் சிறார் ஒருவரைபோலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பை மற்றும் ரூ.5000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நினைவாற்றலால், சிசிடிவி இல்லாமே குற்றவாளிகளை போலீசார் விரைந்து பிடித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com