காதல் திருமணம் செய்த தங்கை; படுகொலையில் ஈடுபட்ட அண்ணன் - கும்பகோணத்தில் கொடூரம்

காதல் திருமணம் செய்த தங்கை; படுகொலையில் ஈடுபட்ட அண்ணன் - கும்பகோணத்தில் கொடூரம்
காதல் திருமணம் செய்த தங்கை; படுகொலையில் ஈடுபட்ட அண்ணன் - கும்பகோணத்தில் கொடூரம்

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கணவருடன் சகோதரர் வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, அப்பெண்ணின் சகோதரர் மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகேயுள்ள விளந்தகண்டம் அய்யாகாலனியைச் சேர்ந்தவர் சரண்யா (வயது 28). இவருடைய சகோதரர் சக்திவேல். அவருடைய மைத்துனர் ரஞ்சித். இவர்களில் ரஞ்சித்தும் சரண்யாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் செய்வதற்காக உறவினர்கள் பேசி வைத்துள்ளனர். அதற்கிடையில் ரஞ்சித்தை பிரிந்ததாக சொல்லப்படும் சரண்யா, தன் நரசிங் படிப்பை முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அங்கு அதே மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருபவர் திருவண்ணாமலை சேர்ந்த மோகன் என்பவரை சரண்யா காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ரஞ்சித்துடன் திருமணம் நிச்சயம் செய்ய இருப்பதாக அதற்காக ஊருக்கு வரும்படி சரண்யாவை அவர் குடும்பத்தினர் அழைத்துள்ளனர். தகவலறிந்த சரண்யா சென்னையிலேயே மோகனுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. இதைக்கேட்ட அவரது சகோதரர் வீட்டிற்கு விருந்து வைக்க வேண்டும் எனக்கூறி, மோகனை அழைத்து வரும்படி கூறியுள்ளார். சகோதரரின் வார்த்தையை நம்பி, சரண்யா மற்றும் மோகன் ஆகிய இருவரும் நேற்று அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டு வாசலில் நின்ற அவர்களுக்கு, சொம்பில் தண்ணீர் கொடுத்துள்ளார் சகோதரர் சக்திவேல். தண்ணீரை அவர்கள் குடிக்க முற்படும்பொழுதே, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக்திவேலும் அவரது மைத்துனர் ரஞ்சித்தும் இருவரையும் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரும் உயிரிழந்த நிலையில், சக்திவேல் மற்றும் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து அங்கு சென்ற சோழபுரம் போலீசார், சரண்யா - மோகன் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இருவரும் தொடி மகளிர் காவல் நிலையத்தில் கைதாகினர். இதற்கிடையே உடல்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிபிரியா தாயாரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், “இரட்டை கொலை நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

- செய்தியாளர்: காதர் உசைன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com