குற்றம்
வேலூர்: ரயிலில் கடத்திவரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது
வேலூர்: ரயிலில் கடத்திவரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது
பயணிகள் ரயிலில் கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இருப்பு பாதை போலீசார், ஒடிசாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகத்திற்கும், தமிழகம் வழியாக மற்ற மாநிலங்களுக்கும் கஞ்சா கடத்துவதை தடுக்க வேலூர் மாவட்ட காட்பாடி ரயில்வே இருப்பு பாதை காவலர்கள், காட்பாடி வரும் ரயில்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எஸ்வந்பூர் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த மனோனன் சாகு (33), குஞ்சபனாபேரா (31) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.