கைதான இருவர் (வெங்கடேசன் மற்றும் தமிழழகன்)
கைதான இருவர் (வெங்கடேசன் மற்றும் தமிழழகன்)pt desk

திருச்சி: பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்துச் சென்றதாக பிரபல ரவுடி உட்பட இருவர் கைது

திருவெறும்பூர் அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற பிரபல ரவுடி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவர் கடந்த 9ஆம் தேதி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (எ) வெங்கடேஷ் (27) மற்றும் அவரது நண்பரும் திருவெறும்பூர் மலைக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவருமான தமிழழகன் (48) மற்றும் அவர்களது நண்பரொருவர் என மூன்று பேர் ஆறுமுகத்திடம் பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

Police station
Police stationpt desk

இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், வழக்குப் பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், விஷ்ணு (எ) வெங்கடேசன் மற்றும் தமிழழகன் ஆகிய இருவரையும் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது மூன்றாவது நண்பர் ஒருவரை தேடி வருகின்றனர்.

கைதான இருவர் (வெங்கடேசன் மற்றும் தமிழழகன்)
போலி NCC முகாம் விவகாரம்: சிவராமனிடம் 2 துப்பாக்கிகள்.. போலீசார் விசாரணையில் நீதிபதிகள் அதிருப்தி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com