திருவள்ளூர்: பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை- பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது

திருவள்ளூரில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளியை கைது செய்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் 85 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
Accused with police
Accused with policept desk

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பெரம்பூர் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகைகள், 900 கிராம் வெள்ளி பொருட்கள், ₹1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஊத்துக்கோட்டை காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

Arrested
Arrestedfile

அதில், கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பழுதாகி விடவே, அங்கிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தை திருடி சென்றதும், பழுதான இருசக்கர வாகனமும் திருட்டு பைக் என தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் விசாரனையை தீவிரப்படுத்தினர். அதில் தோமூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன், பூண்டி பகுதியை சேர்ந்த கேசவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Accused with police
“என் கணவர் இயக்குநர் என்று கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்” - போலீசில் பெண் புகார்!

கைது செய்யப்பட்ட பிரபாகரன் பாஜக பிரமுகர் என்பதும், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 85 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com