Accused
Accusedpt desk

மயிலாடுதுறை: மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மோசடி - இருவர் கைது

மயிலாடுதுறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர் - ரேணுகாதேவி தம்பதியர். இவர்களது 9 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவைச் சேர்ந்த இரு நபர்கள் ராஜசேகர் மற்றும் ரேணுகா தேவியை அணுகி அவர்களின் மகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், 6 மாதத்தில் குணமாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Court
Courtpt desk

இதை நம்பிய தம்பதியர், குழந்தையின் சிகிச்சைக்காக ரூ.84 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட இரு நபர்களும் மீண்டும் வரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜசேகர் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். அதில், ராஜசேகரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்து தலைமறைவான இருவரும் புதுக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்துள்ளது.

Accused
"தப்பு பண்ற ஆம்பளையத்தான் தூக்கி வெச்சு கொண்டாடுறீங்க" - ஆதங்கத்தோடு சொன்ன ராதிகா சரத்குமார்!

இதையடுத்து அங்கு சென்ற மணல்மேடு போலீசார், ஆந்திர மாநிலம் சத்திய சாயி மாவட்டம் இந்துபூர், லே பாக்ஸ் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (42), அன்னப்பா (44) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com