குற்றம்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் ஃபேஸ்புக்கால் கைது
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் ஃபேஸ்புக்கால் கைது
சென்னை ராயப்பேட்டை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் கமல் என்பவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். அண்மையில் கமல் வீட்டிற்கு சென்ற அவரது நண்பர் சசிகுமார் கஞ்சா செடியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய ராயப்பேட்டை காவல்துறையினர் சசிகுமாரை கைது செய்தனர்.
சசிகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் கமலையும் கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்த கஞ்சா செடியையும் அழித்தனர்.