50 ரூபாய்க்கு நிகழ்ந்த சண்டையில் இருவர் கத்தியால் குத்தி கொலை-டெல்லியில் நிகழ்ந்த கொடூரம்

50 ரூபாய்க்கு நிகழ்ந்த சண்டையில் இருவர் கத்தியால் குத்தி கொலை-டெல்லியில் நிகழ்ந்த கொடூரம்
50 ரூபாய்க்கு நிகழ்ந்த சண்டையில் இருவர் கத்தியால் குத்தி கொலை-டெல்லியில் நிகழ்ந்த கொடூரம்

டெல்லியில் 50 ரூபாய் கடனை திருப்பித்தர மறுத்ததால் எழுந்த வாய்த்தகராறில் இருவர் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியின் அஸ்ராத் நிஜாமுதின் பகுதியில் நடைபாதையில் வசித்து வந்தவர்கள் ஜுங்கு(27), சோனு(28). அதேபோல் பாரபுல்லா ஃப்ளைவேயில் வசித்து வந்தவர்கள் மாயுர் தாமஸ்(40) மற்றும் லோகேஷ் பகதூர்(40). குடும்பத்தினரால் கைவிடப்பட்டு ஆதவரவற்ற நிலையில் தினக்கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்திவரும் பலரும் இதுபோன்று நடைபாதைகளில் தங்கிவருகின்றனர்.

இந்நிலையில் தாமஸும், பகதூரும் ஜுங்குவிடம் சில நாட்களுக்கு முன்பு 50 ரூபாய் கடனாகப் பெற்றுள்ளனர். திருப்பி தருவதாகக் கூறி இரண்டு வாரங்களாகியும் பணத்தை திருப்பி தராததால் ஜுங்கு 50 ரூபாயை தருமாறு அவர்களிடம் கேட்டிருக்கிறார். ஆனால், தாமஸும், பகதூரும் அவரை அங்கிருந்த பலர் முன்பு வைத்து கிண்டல் செய்து பணத்தை தராமல் அனுப்பியிருக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜுங்கு தான் தங்கியிருந்த பகுதியிலுள்ள தனது நண்பர் சோனுவிடம் இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். திட்டமிட்டபடி, அதிகாலை 3 மணியளவில் சோனுவும், ஜுங்குவும் அஸ்ராத் நிஜாமுதீன் பகுதிக்குச் சென்று நன்கு தூங்கிக்கொண்டிருந்த தாமஸையும், பகதூரையும் கத்தியால் கழுத்தில் 5, 6 முறை குத்தி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அங்கு வருவதற்குமுன்பே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதுபற்றி சம்பவம் நடத்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில், திங்கட்கிழமை இரவு ஜுங்கு தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டதாகவும், ஆனால் இருவரும் அவரை கேலிசெய்து அனுப்பியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கின்றனர். கொலை நடத்த 2 மணிநேரத்திலேயே போலீசார் சோனு மற்றும் ஜுங்குவை கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர். மேலும் கொலைசெய்ய பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com