16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இருவர் கைது.. போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
பேர்ணாம்பட்டில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே மத்தூர் பகுதியை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் (18) மற்றும் பிரதாப் (34) ஆகிய இருவரும் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்து செய்துள்ளனர். இதில் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அன்பரசன் மற்றும் பிரதாப் ஆகிய இருவர் மீதும் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அன்பரசன் மற்றும் பிரதாப் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

